middle ad

நாடாளுமன்றத் தேர்தல் வரைவு-2024 தன்னாட்சியும் கூட்டாட்சியும்

 நாம் தமிழர் கட்சி

நாடாளுமன்றத் தேர்தல் வரைவு-2024


தன்னாட்சியும் கூட்டாட்சியும் 




நாட்டின் பாதுகாப்பு, பணம் அச்சிடுதல் மற்றும் வெளியுறவுத்துறை ஆகியவற்றை ஒன்றியக் கட்டுப்பாட்டில் இருக்கச் செய்துவிட்டு, ஏனைய அதிகாரங்கள் யாவற்றையும் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்க இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தேவையான மாற்றம் கொண்டுவர நடவடிக்கை


இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சிக் கொள்கை என்பது பெயரளவிலேயே உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது பட்டியலில் உள்ள சட்டமியற்றுகின்ற முறையில், ஒன்றிய அரசு 97 தலைப்புகளில் (Subjects) சட்டமியற்றும் அதிகாரத்தையும், மாநில அரசு 66 தலைப்புகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும் பெற்றிருக்கின்றன. இத்தோடு, பொதுப் பட்டியலிலுள்ள தலைப்புகளிலும் ஒன்றிய அரசே இறுதி முடிவை எடுக்கும் எனும் வல்லாட்சிப் (எதேச்சாதிகார) போக்கு நிலவுவதால், பொதுப் பட்டியல் முழுமையாக நீக்கப்பட்டு அதன் அனைத்து அதிகாரங்களும் மாநிலப் பட்டியலில் சேர்க்கப்படுவதே சரியாக இருக்கும்


நாட்டின் பாதுகாப்பு, பணம் அச்சிடுதல் மற்றும் வெளியுறவுத் துறை ஆகியவற்றை ஒன்றியக் கட்டுப்பாட்டில் இருக்கச் செய்துவிட்டு, ஏனைய அதிகாரங்கள் யாவற்றையும் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்க இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தேவையான மாற்றம் கொண்டுவர தேசிய இனக் கட்சிகளுடன் இணைந்து நாம் தமிழர் கட்சி தொடர் நடவடிக்கையில் ஈடுபடு


0 comments: