middle ad

NTK Whatsapp Status

[NTK Whatsapp Status][pvid]

Latest Music

[Music][pvid]

Movie Trailer

[Trailer][pvid]

Tamil Movies

[Tamil Movies][pvid]

Bangla Music

[Bangla Muvic Video][pvid]

Punjabi Music

[Punjabi][pvid]

காவல்துறை உயரதிகாரி தாக்கப்படுமளவிற்குச் சட்டம்-ஒழுங்கு சீர்கெட அரசு விற்கும் மதுவே முதன்மைக் காரணம்! - சீமான் கடும் கண்டனம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல் துணை கண்காணிப்பாளர் சகோதரி காயத்ரி அவர்களின் தலை முடியை இழுத்து கடுமையாகத் தாக்கப்பட்ட நிகழ்வு வன்மையான கண்டனத்துக்குரியது. போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மதுபோதையில் இருந்ததே இக்கொடுந்தாக்குதலுக்கு முக்கிய காரணம் எனும்செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியில் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் காவல்துறை உயர் பெண் அதிகாரி ஒருவரே பட்டப்பகலில் தாக்கப்படும் அளவிற்குச் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது. கார் பந்தயம் போன்ற ஆடம்பரங்களில் கவனம் செலுத்துகின்ற அரசால் எப்படி காவல்துறையைச் சீரமைப்பதில் கவனம் செலுத்த முடியும்?

நாட்டில் நடக்கும் அனைத்து சமூகக் குற்றங்களின் ஆணிவேராக இருப்பது மது போதைதான் எனும் நிலையில் 

மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த மறுக்கும் திமுக அரசின் பொறுப்பற்றதனமே காவல்துறை உயரதிகாரியே தாக்கப்படுமளவிற்கு நிலைமை மோசமடைய முதன்மைக்காரணமாகும். ஆனால், கார் பந்தயத்தில் மதுவிளம்பரங்கள் மூலம் வருமானம் பார்க்கத் துடிக்கும் அளவிற்கு மிகத்தவறான நிர்வாகமுடைய திராவிட மாடல் அரசிடம் எப்படி நல்லாட்சியை எதிர்பார்க்க முடியும்?

ஆகவே, காவல் துணை கண்காணிப்பாளர் சகோதரி காயத்ரி அவர்களைத் தாக்கியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, சமூகக் குற்றங்களைத் தடுத்து, சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்த முதலில் திமுக அரசு இதற்கு மேலாவது மதுவிற்பனையைக் கைவிட்டு, மதுக்கடைகளை இழுத்து மூடவேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

- செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

250 கோடிகள் செலவழித்து ஆடம்பர கார் பந்தயம் நடத்தும் திராவிட மாடல் அரசிடம், 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப் பணமில்லையா? -  சீமான் கண்டனம்

அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் வகையில் திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

பள்ளிக்கல்வித்துறையின் சார்பாகக் கடந்த ஜூலை 1ஆம் நாள் வெளியிட்ட புதிய அரசாணை 150இன் படி, தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்றிருந்த நிலையை மாற்றி, இனி 700 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அரசுப்பள்ளியில் பயிலும் இலட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் உடற்திறன் மேம்பாட்டைச் சீர்குலைக்கும் திமுக அரசின் இந்நடவடிக்கை எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.

ஏற்கெனவே நடைமுறையிலிருந்த 1997ஆம் ஆண்டு அரசாணை 525இன் படி 6ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை 250க்கு அதிகமாகும்போது ஓர் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும், பின்னர் கூடுதலாக உள்ள ஒவ்வொரு 300 மாணவர்கள் எண்ணிக்கைக்கும் கூடுதலாக ஓர் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் என ஒரு பள்ளிக்கு 3 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு மிகாமல் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை 400க்கும் அதிகமாகும் போது, அந்தப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்துக்குப் பதிலாக, ஓர் உடற்கல்வி இயக்குநர் பணியிடமாகத் தரம் உயர்த்திடவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்று இருந்த நிலையிலேயே, மாணவர்களுக்கு முழுமையான உடற்திறன் பயிற்சி அளிக்க முடியாத நிலையில், தற்போது 700 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்று மாற்றுவது எவ்வகையில் நியாயமாகும்?

அதிலும், தற்காலத்தில் அலைபேசி மற்றும் கணினி உள்ளிட்ட நவீன அறிவியல் சாதனங்களில் மூழ்கிக் கிடக்கும் மாணவ சமுதாயத்தின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் நலத்தைப் பேணவும் உடற்பயிற்சி என்பது இன்றியமையாத தேவையாக உள்ள நிலையில், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிப்பதற்குப் பதிலாக, குறைப்பதென்பது தமிழ்நாடு அரசின் மிகத்தவறான நிர்வாக முடிவாகும்.

இப்படி ஏழை மாணவர்களுக்கான கற்பிக்கும் ஆசிரியர் பணியிடங்களைக் குறைத்துதான் அரசு தன்னுடைய நிதிநிலையைச் சீர் செய்ய வேண்டுமா? கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 இலட்சம் கொடுக்க நிதி இருக்கும் திமுக அரசிடம், படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வி அளிக்கும் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கப் பணமில்லையா? மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு, கற்பிக்கும் ஆசிரியரைக் குறைத்து அவர்களின் கல்வியை நிறுத்துவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?

250 கோடிகளை வாரியிறைத்து கார் பந்தயம் நடத்தப் பணம் இருக்கும் அரசிடம் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப் பணமில்லை என்பது வெட்கக்கேடு இல்லையா? இதுதான் தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையை உலகத்தரத்திற்கு வளர்த்திடும் முறையா? கார் பந்தயத்தில் எத்தனை தமிழர்கள் இடம்பெற்று இருந்தனர்? எத்தனை ஏழைக்குழந்தைகள் அதனால் பயன்பெற்றனர்? ஒரே ஒரு ஒலிம்பிக் பதக்கத்தையாவது இந்த ஆடம்பர கார் பந்தயத்தால் வாங்கித் தர இயலுமா? கார் பந்தயத்தால் அந்நிய முதலீடுகள் குவியுமென்றால், அந்நிய முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா  செல்ல வேண்டிய அவசியம் என்ன?

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கப் பணமில்லாமல் ஆட்குறைப்பு செய்கின்ற அவலநிலையின் மூலம், மூன்றாண்டு திராவிட மாடல் ஆட்சியில் பல்லாயிரம் கோடிகள் அந்நிய முதலீடுகளைக் குவித்து, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிவிட்டோம் என்று திராவிட மாடல் ஆட்சியாளர்கள் மார்தட்டுவது அனைத்தும் பச்சைப்பொய் என்பது உறுதியாகிறது.

அரசுப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது என்பது அரசின் நிர்வாகத் திறமையின்மையாலும், தரமான கல்வியை வழங்கத் தவறியதாலும் நிகழும் கொடுமையாகும். அதனைச் சரி செய்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்காமல், அதனையே காரணம் காட்டி ஆசிரியர் பணியிடங்களைக் குறைப்பதென்பது அரசின் அறிவார்ந்தச் செயல் ஆகாது.

ஆகவே, அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் அரசாணையை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற்று, பழைய நிலையே தொடர உத்தரவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

 309ஆம் ஆண்டு பிறந்தநாள் ஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு நமது பாட்டனார் பூலித்தேவன் வீரத்தைப் போற்றுவோம்!

தமிழ்ப்பேரினத்தின் வீரமிகு பெரும்பாட்டனார், மாமன்னர் பூலித்தேவன் நினைவைப் போற்றுகின்ற திருநாள் இன்று!

ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் அன்னைத்தமிழ் நிலம் அடிமைப்பட்டுகிடந்த பொழுது, அதன் விடுதலைக்குக் கிளர்ந்தெழுந்த வீரர்களில் முதன்மையான பெருமகனார் நம்முடைய தாத்தா பூலித்தேவன் அவர்கள்.

'நெற்கட்டான் செவ்வயலில் யாரோ பூலித்தேவனாமே' என ஏளனமாக எண்ணி படையைத்திரட்டி வந்த ஆங்கிலேயர்களை, வெறும் வாளும், வேலும் கொண்ட வீரத்தமிழ் மறவர் படைநடத்தி, களத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டு போரிட்டு வென்ற மாவீரன்!

எந்த இடத்திலிருந்து ஆங்கிலேயர் படைதிரட்டி வந்தனரோ அதுவரை திருப்பி அடித்து விரட்டிய வீரத்திருமகன் பூலித்தேவன் அவர்கள்!

அவர் போரிட்டுக் காட்டிய பிறகுதான் பல மன்னர்கள் தாங்களும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட முடியும் என்ற பெருநம்பிக்கை கொண்டனர். பீரங்கி குண்டுகளால்கூடத் துளைக்க முடியாத கோட்டையைக் கட்டி ஆண்ட பேரரசன் பூலித்தேவன் அவர்களின் வீரத்தைப் போற்றுவதில் வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் பெருமிதமடைகிறோம்!

வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் அவர்களுக்கு வீரவணக்கம்!

இன்று (01-09-2024) மாலை 05 மணியளவில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ள நெற்கட்டான் செவ்வயலில் அமைந்துள்ள பாட்டனாரின் நினைவிடத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்த மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

பூலித்தேவன்

309ஆம் ஆண்டு பிறந்தநாள் ஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு நமது பாட்டனார் பூலித்தேவன் வீரத்தைப் போற்றுவோம்

 தூத்துக்குடி: அம்மோனியா நச்சுப்புகைக் கசிவால் இளைஞர் உயிரிழப்பு! மக்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும், விதிகளை மீறக்கூடிய தொழிற்சாலைகள் மீது

கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்!

-செந்தமிழன் சீமான் கண்டனம்

தூத்துக்குடியில் தனியார் உரத் தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா நச்சுப்புகைக் கசிவுக் காரணமாக உயிரிழந்துள்ள ஹரிஹரன் என்கிற இளைஞரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு தொழிற்சாலையின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகின்றேன்.

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் Tuticorin Alkali Chemicals and Fertilizers Limited என்கிற தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியாக் கசிவின் காரணமாக ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதும் மேலும் இருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

சென்னை கோரமண்டல் ஆலையில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அம்மோனியா நச்சுப்புகைக் கசிவு ஏற்பட்டு 42க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்ததோடு, இதே தூத்துக்குடியில் புதூர் பாண்டியாபுரத்தில் தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் சென்ற சூலை மாதம் அம்மோனியாக் கசிவு ஏற்பட்ட நிலையில், மீண்டும் தூத்துக்குடியில் மற்றுமொரு நச்சுப்புகைக் கசிவு ஏற்பட்டு இம்முறை உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது அரசு இயந்திரத்தின் அப்பட்டமான தோல்வியாகும். சீரழிவுகள் வருமுன் காத்திருக்க வேண்டிய அரசு மூன்று முறை வந்தபின்னும் எதேச்சதிகாரப் போக்கினைக் கடைபிடிக்கும் வகையில் தான் தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமோ இன்றளவிலும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டுள்ளது.

பந்தயங்களிலும் பயணங்களிலும் ஈடுபாடு கொண்டுள்ள திமுக அரசும் அதன் ஆட்சியாளர்களும் மக்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் எப்பொழுது கவலைகொள்வார்கள்?

நாம் தமிழர் கட்சி

"பார்முலா" பந்தயம் ஏற்பாடு செய்யும் அரசு, தமிழ்நாட்டில் தொடர்ந்து ஏற்படும் அம்மோனியா நச்சுப்புகைக் கசிவினைத் தடுக்க ஆட்சிமுறை "பார்முலா" எதாவது வைத்துள்ளதா?

தொடர்ச்சியாக ஏற்படக்கூடிய தொழிற்சாலை விதிமீறல்களுக்கும் அதனால் நிகழும் சீரழிவுகளுக்கும் தமிழ்நாடு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். அம்மோனியா நச்சுப்புகைக் கசிவினால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்திட வேண்டும். இந்தத் தனியார் ஆலையில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இனியாவது தனியார் ஆலைகளின் நலனைப் பின்னுக்குத் தள்ளி, மக்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும், விதிகளை மீறக்கூடிய தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள ஆலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விதிமீறலுக்கு ஏற்ப தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வேண்டும். பாமர மக்களின் வாழ்க்கையைப் பெருமுதலாளிகளின் நலனுக்காகப் பணயம் வைப்பதை தமிழ்நாடு அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக எச்சரிக்கிறேன்.

தூத்துக்குடி: அம்மோனியா நச்சுப்புகைக் கசிவால் இளைஞர் உயிரிழப்பு சீமான் கண்டனம்

 தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு தர மறுக்கும் தனியார் நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைத்து வருவது ஏன்?

ஓசூரில் இயங்கும் டாடா மின்னணு நிறுவனம், தொழிற்சாலையில் பணியாற்ற உத்திரகண்ட் மாநிலத்திலிருந்து 4000 பெண்களை அழைத்து வரவிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நிறுவனம் பணித்தேவைக்காகச் சிறப்பு ரயில் மூலம் 800 இளம்பெண்களை ஜார்க்கண்டிலிருந்து அழைத்துவந்தபோதே கடும் எதிர்ப்பினை தெரிவித்த பிறகும் மீண்டும் மீண்டும் வெளி மாநிலங்களிலிருந்து ஆட்களைப் பணியமர்த்தி, தமிழர்களின் வேலைவாய்ப்பினைத் தட்டிப்பறிப்பது என்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஐம்பதாண்டுகளாக தமிழ்நாட்டை மாறிமாறி ஆண்ட இரு திராவிடக் கட்சிகளின் அரசுகளும் பன்னாட்டுக் கூட்டிணைவு நிறுவனங்கள் மூலமே வேலைவாய்ப்பு பெருகும், மக்களின் வறுமை நீங்கும், தமிழ்நாடு அபார வளர்ச்சியடையும் என்று மக்களை நம்பவைத்து, போட்டிப்போட்டு தனியார் பெருமுதலாளிகளைச் சிவப்புக் கம்பளம் விரித்து அழைத்துவந்து அதையே பெரும் சாதனையாகவும் விளம்பரம் செய்து வருகின்றன. அதுமட்டுமின்றிப் பல்லாயிரம் கோடிகள் வரிச்சலுகை, குறைந்த விலையில் நிலம்,நீர், மின்சாரம்,மனிதவளம் என யாவும் அளித்துச் சொந்த நாட்டுத் தொழில் முனைவோரையும், உள்ளூர் சிறுகுறு நிறுவனங்களையும் மொத்தமாக அழித்து முடித்தன.

ஆனால், அவ்வாறு நிறுவப்பட்ட தனியார் நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு மக்களின் உழைப்பினை உறிஞ்சி

அடிமைகள் போலவே பயன்படுத்துகின்றன. தமிழ் மக்களின் உழைப்பினையும், தமிழ் நிலத்தின் வளங்களையும் சுரண்டி தங்களை வளப்படுத்திக்கொண்ட பிறகு திடீரென நிறுவனத்தை மொத்தமாக மூடிவிட்டு அங்குப் பணிபுரியும் ஊழியர்களை நட்டாற்றில் விட்டுச் செல்கின்றன. இதனால் வேலைவாய்ப்பும் இழந்து, வேறு வேலைக்கும் செல்ல முடியாமல் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி வறுமையில் வாடும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்படுகின்றனர்.

இந்தியப் பெருநிறுவனங்களை முதலீடு செய்ய அழைத்ததுபோக, தற்போது நோக்கியா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய அழைத்து வருவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள். அதே நோக்கியா நிறுவனம் கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட தனது தொழிற்சாலையைப் பாதியில் மூடிவிட்டு அங்குப் பணியாற்றிய ஊழியர்களை வாழ்வாதாரமின்றித் தவிக்கவிட்டுச் சென்றதற்கு முதல்வர் என்ன பதில் கூறப்போகிறார்?

ஆனால், தற்போது இதுபோன்ற நிரந்தரமற்ற பணிகளிலும் தமிழர் அல்லாத வடவர்களையே முழுக்க முழுக்கத் தனியார் நிறுவனங்கள் பணியமர்த்தும்போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளுக்காகக் குடியேறிய வடவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமாகும். சென்னை, கோவை, உள்ளிட்ட மாநகரங்கள், திருப்பூர், ஓசூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் மட்டுமின்றித் தமிழ்நாட்டின் கிராமங்கள் வரை வடவர்களையே பணியமர்த்தும்போக்கு அதிகரித்து வருகிறது.

அவ்வாறு தமிழ்நாட்டிற்கு வரும் பிறமாநிலத்தவர் விரைவாக குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று பெற்று நிரந்தரமாகக்

குடியேறுகின்றனர். மேலும், வாக்காளர் அட்டையும் பெறுவதால் தமிழ்நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும் ஆற்றலாகவும் வடவர்கள் உருவெடுத்து வருகின்றனர். இதனால் தமிழர்களின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் யாவும் பறிக்கப்படுவதோடு மட்டுமின்றி எஞ்சியுள்ள அரசியல் அதிகாரத்தையும் வடவர்களிடம் முற்றாக இழந்து, தமிழர்கள் தங்கள் சொந்த நிலத்திலேயே உடைமைகள், உரிமைகளற்ற அகதிகளாக, அடிமைகளாக வாழும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழ்நாட்டில் குடியேறும் வடவர்களால் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடுங்குற்றச் செயல்களும் அதிகரித்து அதனால் சட்டம் ஒழுங்கும் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. அதுமட்டுமின்றி, உழைப்புக்கேற்ற குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் என்பதையும் தகர்த்து, மிகக்குறைந்த ஊதியத்திற்கு வடவர்கள் பணிபுரிய முன்வருவதால் தமிழகத் தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமையும் பறிபோய் வர்க்கப்பாகுபாட்டில் 20 ஆண்டுகள் தமிழ்நாடு பின்னோக்கி செல்லும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தி மொழி ஆதிக்கத்தைத் தீவிரமாக எதிர்க்கும் வீரமிகு தமிழ்மண், திட்டமிட்டுக் குடியேற்றப்படும் இந்தி மொழியினரின் ஆதிக்கத்தை எதிர்க்க முடியாமல் தடுமாறுவது வரலாற்றுப் பெருந்துயராகும்.

• ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கில் வடவர்கள் குடியேறி தமிழர்களின் வேலைவாய்ப்பினைப் பறிக்கும் நிலையில் அதனைத் தடுக்கத்தவறி வேடிக்கை பார்ப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?

• தமிழ்நாட்டில் குடியேறும் வடவர்கள் குறித்துத் தமிழ்நாடு அரசிடம் என்ன தரவுகள் உள்ளது?

• தனியார் நிறுவனங்கள் வடவர்களைப் பணியமர்த்தும் போக்கினைக் கட்டுப்படுத்த திமுக அரசு என்ன திட்டம் வைத்துள்ளது?

• தமிழ்நாட்டிற்கு வரும் பிறமாநிலத்தவருக்கு உள்நுழைவுச்சீட்டினை திமுக அரசு இதுவரை நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்?

• தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் தமிழருக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நாம் தமிழர் கட்சியின் நெடுநாள் கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு சட்டமாக்கப்போவது எப்போது?

தமிழருக்கு வேலைவாய்ப்பளிக்காத தனியார் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதால் தமிழருக்கு என்ன பயன்? என்ற கேள்விகளுக்கெல்லாம் திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது?

பல்லாயிரம் கோடி தனியார் அந்நிய முதலீடு, பல இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்றெல்லாம் வாய் வார்த்தைகளால் கவர்ச்சி விளம்பரங்கள் செய்வதைக் கைவிட்டு திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட தனியார் நிறுவனங்களால் வேலைவாய்ப்பினைப் பெற்ற தமிழ் மக்களின் பெயர் பட்டியலை திமுக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

ஆகவே, தமிழ்நாட்டில் தொடங்கப்படும் தனியார் நிறுவனங்கள் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பினைத் தர உடனடியாகத் தனிச்சட்டமியற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இனியாவது, தமிழ்நாட்டில் குடியேறும் பிறமாநிலத்தவரைக் கட்டுப்படுத்த உள்நுழைவுச் சீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு தர மறுக்கும் தனியார் நிறுவனங்களை தமிழ்நாட்டில்

நிலவுரிமையைக் காக்க போராடும் ஏகனாபுரம் மக்கள் மீது பொய் வழக்கு புனைவதை திமுக அரசு கைவிட வேண்டும்!

செந்தமிழன் சீமான் வலியுறுத்தல்

தலைமை ஒருங்கிணைப்பாளர் |

நாம் தமிழர் கட்சி

பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 765 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடிவரும் மக்கள் மீது திமுக அரசு பொய் வழக்கு புனைந்து மிரட்டுவது கொடுங்கோன்மையாகும்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4550 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உட்பட 13க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3250 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து, நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். ஆனால், போராடும் மக்களின் உணர்வையும், உரிமையையும் சிறிதும் மதியாது, ஆட்சி அதிகாரத் துணைகொண்டு மக்கள் போராட்டங்களை திராவிட மாடல் திமுக அரசு ஒடுக்கி வருகின்றது. 

அதன் ஒரு பகுதியாக இன்று ஏகனாபுரம் பெண்கள், முதியவர்கள், விவசாயிகள் உட்பட போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாகவும், பொதுமக்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் திமுக அரசு பொய் வழக்கு பதிவு செய்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும்.

விளை நிலங்களை அழிக்கும் திட்டங்களைத் தொடர்ந்து மக்கள் எதிர்த்து வரும் நிலையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அடக்கி ஒடுக்குவது வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

சனநாயக நாட்டில் அமைதியான முறையில் அறவழியில், மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதும், குரலற்ற எளிய மக்களின் போராட்டத்திற்குத் தோள்கொடுத்துத் துணைநிற்பதென்பதும் அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அதற்குக்கூட அனுமதிமறுத்து திமுக அரசு வழக்கு பதிவதென்பது வெட்கக்கேடானதாகும்.

மக்களாட்சி, கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை குறித்தெல்லாம் மேடைக்கு மேடை பேசும் திமுக புகழ்பாடிகள் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? இதுதான் திராவிட மாடலா? இதுதான் சமூக நீதியா? 

எனவே, தமிழ்நாடு அரசு ஏகனாபுரம் பொதுமக்களை எவ்வித வழக்கும் பதியாமல் விடுவிக்க வேண்டுமெனவும், தங்களின் நில உரிமைக்காகப் போராடும் மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு உடனடியாகச் செவி சாய்க்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

- செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

நிலவுரிமையைக் காக்க போராடும் ஏகனாபுரம் மக்கள் மீது பொய் வழக்கு புனைவதை திமுக அரசு கைவிட வேண்டும்